தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றார். இந்நிலையில் அடுத்த டிஜிபி யார் என்பதை முடிவு செய்ய இன்று டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை அமைச்சர் அமுதா மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதில் ஊர் காவல் படை தலைவர் பி கே ரவி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் காவல் வீட்டு வசதி வாரிய தலைவர் ஏ கே விஸ்வநாதன் மற்றும் டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா உள்ளிட்டோருக்கும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.