தமிழகத்தில் நடப்பு ஆண்டு 14,000 கோடி பயிர் கடன் வழங்குவதற்கு கூட்டுறவுத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,நிகழ்வு நிதியாண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 14,000 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி வரை 1,37,052 விவசாயிகளுக்கு ரூ.1,102.17 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரால் மேட்டூர் அணையில் குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு சாகுபடி பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்கப்பட்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.