தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

மதுரையின் முன்னாள் எம்பி, ஏ.ஜி.எஸ்.ராம்பாபு (60) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரையில் 2 முறை எம்பி.யாக இருந்தவர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 1996 ஆம் ஆண்டு 3வது முறையாக எம்பியாக வெற்றி பெற்றார். ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளரான இவர், கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும் இருந்தார். இவர் உடல் நலமின்றி கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *