சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார். கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவியை அவருடைய பெற்றோர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அண்ணன் உறவு முறையான மனோஜ் (24), அஜய் (27), கண்ணா (22) ஆகிய மூன்று பேரும் மாணவியை சீரழித்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.