டிக்கெட் பரிசோதனையின் போது டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் விரைவு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் பயணி ஒருவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் அந்த பயணி டிடிஆரை கீழே தள்ளிவிட்டது டிடிஆர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.