ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிப்பான்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆட்சியில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஜ.எஸ்.கே.பி என்று தீவிரவாத அமைப்பை ஒழிக்க தலிபான் தலைமையிலான அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த நிலையில் தலிபான் அரசின் தலைமையிலான படைகள் இரண்டு ஐ.எஸ் தளபதிகளை சுட்டுக் கொன்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் அவர்கள் கூறியதாவது “தலிபான் தலைமையிலான அரசு படைகள் ஐ.எஸ்.கே.பி என்ற தீவிரவாத அமைப்பின் தளபதிகளான காரி ஃபதே, எஜாஸ் அகமது அஹங்கர் ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.