
ஜெயலலிதா உயிரிழந்த பின்பும் அது குறித்த சர்ச்சைகள் குறையவில்லை. அவர் எப்போது இறந்தார்? என்ற கேள்வி எழுந்து வருகிறது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரணித்த தேதி குறித்து இரு வேறு கருத்துக்கள் உலா வருகிறது. அதாவது அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-விற்கு வந்து எம்.எல்.ஏ வான விளாத்திகுளம் மார்கண்டேயன் கூறியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் ஜெயலலிதாவை கொன்றது மோடி தான் என பேசியுள்ளார்.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில் தி.மு.க சார்பாக பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா முன்னிட்டு மாபெரும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தி.மு.க வை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் விளாத்திகுளம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கூறியதாவது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறக்கும் வரை அந்த கட்சியில் இருந்தேன்.
ஜெயலலிதாவை மோடி தான் கொன்று விட்டார். இதற்கு காரணம் பிரதமர் வேட்பாளராக நிற்க போவதாக கூறியதால் பி.ஜே.பி தான் கொன்றுவிட்டது என பகிரங்கமாக நான் குற்றம் சாட்டுகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்த வாக்குறுதி அனைத்தும் கிட்டத்தட்ட நிறைவேற்றி விட்டோம். குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவி தொகை ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என கூறியுள்ளார்.