சூது கவ்வும் துவங்கி பல வெற்றி திரைப்படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராகவுள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி வாயிலாக உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புது முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார்.
தன் ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோவின் வாயிலாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியிருக்கும் ஜூபாப் நடன செயலியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். ஜூபாப் செயலி தொடர்பாக ஷெரீஃப் பேசியதாவது “உடற் பயிற்சியின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே ஆகும். எனினும் இன்றைய உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரவர் பணிகளில் பிஸியாக உள்ளதால் உடற் பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு நாளொன்றுக்கு வெறும் 5 -10 நிமிடங்களிலேயே எளிய நடனப்பயிற்சி வாயிலாக உடல் நலத்தை பேணுவதற்காக இச்செயலியை உருவாக்கி இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.