தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியான நிலையில் இந்தத் தேர்வு எழுதி மறுகூட்டல் மற்றும் மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள் இதனை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம் பெறாத பதிவு எண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது