டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார். அவருக்கு எக்ஸ்பைரி date இல்லை. வாரண்டி date இல்லை இவர் அடுத்தவரை குறை கூறுகிறாரா? ஜூன் ஒன்றாம் தேதி மாலை 6:00 மணிக்கு திகார் ஜெயிலில் இருப்பார்.

ஜூன் இரண்டாம் தேதி சூரிய வெளிச்சத்தை கூட அவர் பார்க்க மாட்டார். ஏனென்றால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மிகத் தெளிவாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் பெயில் குறிப்பிட்டுள்ள காரணத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியுள்ள நபர் பாரதிய ஜனதா கட்சியின் பிரதம மந்திரியை குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது. இதை நான் கூறவில்லை. டெல்லியில் உள்ள மக்களே கூறுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.