பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சிலர் மாடு முட்டி உயிரிழந்துள்ளனர். மேலும் பார்வையாளரும் மாடு முட்டி பலியாகியுள்ளனர். இதுவரையில் 5க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தர்மபுரியில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் காயமடைந்த சிறுவன் கோகுல் (15) உயிரிழந்தார். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் கோகுல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் ..