அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.

தைப்பொங்கல் அன்று மதுரையில் உள்ள  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று நடத்துகிறது. இந்நிலையில் வாடிவாசல் பார்வையாளர் மேடை தடுப்பு, கால்நடை பராமரிப்பு, சோதனைமையம், விழா மேடை, மாடுபிடி வீரர்கள் சோதனை மையம், மாடுகள் சேகரிக்கும் இடம் போன்ற பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் டாஸ்மார்க் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பாலமேட்டில் ஜனவரி 16-ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜனவரி 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.