டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே அமைந்துள்ள இந்த தோட்டத்தில் ஏராளமான மலர்கள், செடிகள் போன்றவைகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், அந்த காட்சி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். இந்த அழகிய தோட்டம் முகலாய தோட்டம் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மத்திய அரசு அதன் பெயரை மாற்றி உத்தரவிட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், அசாதி கா அம்ரித் மகாத்சவ் என்ற பெயரில் நாடு முழுவதும் மத்திய அரசு பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முகலாய தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயன் என்று மத்திய அரசு மாற்றி உள்ளது. மேலும் இனி முகலாய தோட்டம் அம்ரித் உதயன் என்று அழைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.