இந்தியாவில் செயல்பட்டு வரும் சீரம் நிறுவனம் பயோ டெக்னாலஜி துறையுடன் சேர்ந்து “செர்வாவேக்”என்ற கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை முதன் முறையாக கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 1,25,000 பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிப்படையும் நிலையில், 75,000 பேர் புற்றுநோயால் உயிரிழக்கவும் செய்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கர்ப்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசியை 9 வயது முதல் 14 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை 200 முதல் 400 ரூபாய் மதிப்பீட்டில் சீரம் நிறுவனம் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகள் 3,500 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.