கான்பூரில்  இன்ஜினியரான  அபிஷேக் என்பவர் வசித்து வருகிறார். பொறியியல் படித்த இவர் தனது பொறியியல் தொழிலை கைவிட்டு தற்போது சமோசா விற்பனை நடத்தி வருகிறார். எவ்வளவுதான் உயரமான இடத்திற்கு சென்றாலும் நாம் வந்த பாதையை மறக்கக்கூடாது என்பதற்காக இவர் தான் விற்கும் சமோசாக்களில் பொறியியல் படிப்பு மற்றும் உணவுப் பொருட்களின் பெயர்களை அச்சிட்டு விற்பனை செய்ய தொடங்கியுள்ளார்.

அதிலும் குறிப்பாக படிப்புகளான மெக்கானிக்கல் சமோசா, ஐடி சமோசா, பீசா, பாஸ்தா மற்றும் எலக்ட்ரிக்கல் சமோசா என பல்வேறு பெயர்களை அறிவித்து அதனை விற்க தொடங்கியுள்ளார். இவருடைய இந்த தனித்துவம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தினம் தோறும் இவரது கடையில் சமோசா கடை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.  வியாபார யுத்தி மூலமாக வாடிக்கையாளர்கள் மனதில் அதன் பெயரை பதிய வைத்து விட்டால் அதன் பின் வியாபாரிகளுக்கு நல்ல பணம் கிடைக்கும். இந்த காட்சி பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.