நீண்ட தூர பயணத்திற்கு பொதுமக்கள் ரயில் பயணத்தையே அதிகமாக விரும்புகின்றனர். எனவே ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்பதிவில்லா கட்டணம் ரத்து செய்யப்பட்டு ரயில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். தற்போது கொரோனா குறைந்ததால் அதிக அளவிலான ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் தெற்கு ரயில்வே வாரியம் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே ஜனவரி 21ஆம் தேதி மற்றும்  28ஆம் தேதி களில் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த ரயில்கள் மறுமார்க்கமாக ஜனவரி 22, 29ம் தேதியில் இயக்கப்படும் என்றும, காட்பாடி-ஜோலார்பேட்டை இடையிலான ரயில்கள் ஜனவரி 7, 11 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்களிலும் இரண்டு மார்க்கமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.