1974 ஆம் ஆண்டு சைப்ரஸ் நாட்டின் வடக்கு பகுதி துருக்கி படைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில் சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

அந்த தேர்தலில் முன்னாள் வெளியுறவு மந்திரியான நிகோஸ் கிரிஸ்டோடவுலைட்ஸ் என்பவர் 51. 9 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆன்டீரியாஸ் மேவ் ராய்யன்னிசு 48.1% வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இந்த தேர்தலின் முக்கிய வாக்குறுதி விலைவாசி உயர்வு மற்றும் முறையற்ற புலம்பெயர்வு ஆகியவை முக்கியமாக கருதப்பட்டது.