புஷ்ரா என்ற பெண் ஒரே நேரத்தில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு நடனமாடும் வீடியோ வெளியாகி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இவர் தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் 7.45 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். இதற்கிடையில் புஷ்ரா சைக்கிள் ஓட்டும்போது நடனமாடும் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தன்று அவர் தேசியக்கொடியை அசைத்து நடனமாடும் வீடியோவும் அதில் இருக்கிறது. அத்துடன் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு சாலையில் சைக்கிள் ஓட்டும்போது வளைந்து நெளிந்து நடனம் ஆடுகிறார். அவர் கைப்பிடியை கூட பிடிக்காமல், இருகைகளையும் பயன்படுத்தி சைக்கிளை பேலன்ஸ் செய்து வருகிறார். புஷ்ராவின் திறமையை நெட்டிசன்கள் பாராட்டினாலும், பேலன்ஸ் தவறினால் காயம் ஏற்படும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு பலரும் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by ? B_ush_ra? (@iamsecretgirl023)