ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது  இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள அக்டோபர் 8, 13, 18, 23, மற்றும் 27ஆம் தேதிகளில் பகல் 12 முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதேபோல் வாகன நிறுத்துமிட அனுமதி அட்டை இல்லாத கிரிக்கெட் ரசிகா்களின், வாகனங்கள், மெரீனா கடற்கரையில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.