சென்னையில் இன்று காலை முதல் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி அண்ணாநகரில் உள்ள அசோக் ரெசிடென்சி உரிமையாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று விழுப்புரம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் போன்ற இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதோடு ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் மொத்தம் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அதன் பிறகு சில ஹாஸ்பிடாலிட்டி நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள் நடத்தும் குழும நிறுவனங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும்  வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் தற்போது இப்படி ஒரு சோதனை நடைபெறுவதால் சில முக்கிய அரசியல் புள்ளிகள் சிக்கலாம் என்று கூறப்படுகிறது.