ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் உணவு சாப்பிடாமல் இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் பெரும் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோபிசெட்டிபாளையத்தில் பசியால் 2 பேர் உயிரிழந்ததை நினைத்து என் மனம் ரணமாகிறது. உயிரிழந்த இருவரை புதைக்க பணம் இல்லாமல் குடும்பத்தினர் 7 நாட்கள் வரை சடலத்துடன் இருந்தது இன்னும் பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.

சாலையில் படுத்துறங்கும் 90% மக்கள் இன்னும் வறுமையில் சாப்பாடு இல்லாமல் தான் இருக்கிறார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் வறுமையால்  2 உயிர்கள் இறந்ததை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பசியால் இனி ஒரு உயிர் கூட போகாத நிலை ஏற்பட வேண்டும். அதற்கு ஆட்சியாளர்கள் விளம்பர அரசியல் செய்யாமல் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து மக்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.