சென்னையில்  அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்தப்படும்  பயண அட்டை நாளை (ஏப்.19) முதல் கட்டாயமாக உள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக வெளியான அறிக்கையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் நாளை  முதல் மெட்ரோ ரயில் பயண அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பணமில்லா பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், அத்துடன் பணப் புழக்கத்தைக் குறைக்க வேண்டிய தேவைக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பயண அட்டையை பயன்படுத்தி ரயில்களில் பயணிப்பவா்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.