சென்டம் எடுத்த மாணவிக்கு…. தளபதி விஜய்யின் சூப்பர் சர்ப்ரைஸ்…. பாராட்டும் நெட்டிசன்கள்…..!!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தை அடுத்து தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். அதன்பின் அரசியலில் இறங்க உள்ளதால் நடிப்பிற்கு 6 பிரேக் விட இருப்பதாக தகவல் வெளியாகின.

அதோடு 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மார்க் எடுத்த 1,500 மாணவர்களை விஜய் நேரில் சந்திக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து 12-ஆம் வகுப்பில் 600/600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி மற்றும் அப்பா இறந்த நிலையிலும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி கிரிஜா உள்ளிட்டவருக்கு தளபதி சிறப்பு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவ்விஷயம் இணையத்தில் வைரலான நிலையில், பலரும் தளபதி விஜய்யின் முடிவை பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply