மத்தியபிரதேசத்தில் 2 புது வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி விரைவில் துவங்கி வைக்கிறார். பிரதமர் மோடியின் வருகை பற்றி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தகவல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக முதல்வர் சவுகான் கூறியதாவது “பிரதமர் மோடி ஜூன் 27-ம் தேதி மத்தியப்பிரதேசம் வருகிறார்.

தலைநகர் போபாலில் 2 வந்தே பாரத் ரயில்களை (Bhopal-Indore and Bhopal-Jabalpur) அவர் துவங்கி வைக்கிறார். இது தவிர்த்து ரயில்வே தரப்பிலிருந்து மேலும் 3 வந்தே பாரத் ரயில்களை விரைவில் இயக்கும் திட்டம் இருக்கிறது. இப்போது 18 வந்தேபாரத் ரயில்களானது வெவ்வேறான வழித்தடங்களில் ஓடுகிறது. இவ்வழியில் ஜூன் இறுதிக்குள் நாட்டில் மொத்தம் 23 ரயில்கள் இயங்க தொடங்கும்.