தமிழகத்தில் அரசுப் பணியாளர்களுக்கு பொங்கல்பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுவதுபோல் அறநிலையத் துறை கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் 2000 ரூபாய் ஆக இருந்த பொங்கல் கருணைக் கொடையை, இந்த வருடம்  3000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு, பொங்கல் கருணைக் கொடையாக 3,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசைக் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் 1,000இல் இருந்து 3,000ஆகவும், கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் 3,000இல் இருந்து 4,000ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.