ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசேமூர் பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெசிந்தா(21) டிப்ளமோ பார்மசி படித்து முடித்துவிட்டு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக ஜெசிந்தாவும் அறிவழகன்(23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவை சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்க அலுவலகத்தில் சுயமரியாதை முறைப்படி திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து காதலர்கள் பாதுகாப்பு கேட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் இருவரின் பெற்றோரையும் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஜெசிந்தாவை அறிவழகனுடன் செல்ல அனுமதித்தனர்.