திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆசாரிபுதூர் கிராமத்தில் இருக்கும் மலை குன்றின் மீது மல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. நேற்று வரலாற்று ஆய்வாளர்கள் விஸ்வநாததாஸ், சந்திரசேகர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மலை குன்று பகுதியில் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மலை குன்றின் அடிவாரத்தில் நுழைந்தான் பாறை என்ற இடத்தில் ஈமக்கல் திட்டை கண்டுபிடித்தனர். இது கற்காலத்தை சேர்ந்தது ஆகும்.

சுமார் 4000 ஆண்டுகள் பழமையான ஈமக்கல்லின் மையப் பகுதியில் சிவலிங்கமும், நந்தி உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த ஈமக்கல்லிற்கு அருகில் இருக்கும் பலகை கல் 5 அடி நீளம் கொண்டதாகவும், கல்லில் குறுக்கும் நெடுக்குமாக 7-க்கு 7 என்ற கட்டங்கள் சதுரமாகவும் செதுக்கப்பட்டுள்ளது. அந்த குறியீடுகள் மனிதனுக்கு 7 பிறவிகள் இருப்பதை குறிக்கிறது.