திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறையினர் கொடைக்கானல் அண்ணா சாலை ரோடு, அப்சர்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது 18 கடைகளில் தரமற்ற எண்ணெய் பயன்படுத்தியதும், காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனால் கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர். இதனையடுத்து கடைகளில் அடிப்படை வசதிகளை செய்து சுகாதாரத்துடன் இருக்கும் புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.