திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நீண்ட தூரம் பயணிக்கும் சிலர் டிக்கெட் எடுக்காமல் கடைசி நிமிடத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அமர்ந்து செல்வதால் பணம் செலுத்திய பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி டிக்கெட் பரிசோதகர்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் இருந்து பயணிகளை இறக்கி முன் பதிவு செய்யப்படாத பட்டியில் ஏற வழிகாட்டும் பணியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒரு பயணி டிக்கெட் அல்லது ரயில் பாஸ் பெற்றதை விட உயர் வகுப்பில் பயணம் செய்தால் அல்லது பயணம் செய்யும் முயற்சித்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இதனையடுத்து சம்பந்தப்பட்ட பயணி அபராத தொகையை செலுத்த மறுப்பு தெரிவித்தால் ரயில்வே மாஜிஸ்திரேட்டிடம் பயணி மீது வழக்கு தொடரப்படும் என கூறப்பட்டுள்ளது.