ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கற்பழித்து கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டார். அதாவது கால்நடைகளை மேய்க்க  சென்று சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த காலு மற்றும் கன்கா என்பவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் எரித்தனர்.

இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி. இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அண்ணன் தம்பி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இது தொடர்பான வழக்கு பில்வாரா போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் அதன்படி சிறுமியை கொடூரமாக கற்பழித்துக் கொன்ற காலு மற்றும் கன்கா இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.