கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் திருமணமாகி கணவரைப் பிரிந்து தாயோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு அன்று அந்த பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.  இதை பார்த்து உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் . இது குறித்து காவல்துறை நடத்திய விசாரணையின் அந்தப் பெண்ணின் கழுத்தை நெறிக்கப்பட்டு கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து குடும்பத்தாரிடம் விசாரித்த பொழுது அவருடைய அக்கா மகனான 16 வயது சிறுவன் சந்தேகம் ஏற்பட்டது.

இதனை அடுத்து அந்த சிறுவன் தன்னுடைய சித்தியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது கொலையான பெண்ணும், அந்த சிறுவனும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனால் சிறுவனுக்கு சித்தியின் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் சித்தி தனியாக இருந்த நிலையில் அந்த சிறுவன் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு சித்தி மறுத்ததால் பயந்து போன சிறுவன் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.