
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊத்துமலை காவல் நிலையத்தில் சைலேஷ்(44) என்பவர் போலீஸ்காரராக பணிபுரித்து வருகிறார். முன்னதாக சைலேஷ் சிவகிரி காவல் நிலையத்தில் வேலை பார்த்தார். இந்த நிலையில் சிவகிரி காவல் நிலையத்தில் வேலை பார்த்தபோது சைலேஷ் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று தனிப்படை போலீசார் நாகர்கோவிலில் பதுங்கி இருந்த சைலேஷை அதிரடியாக கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.