சாம்சங் நிறுவனம் Galaxy unpacked நிகழ்வு பிப்ரவரி 1-ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் கேலக்ஸி எஸ் 23, கேலக்ஸி எஸ் 23 ப்ளஸ், கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா என மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் cotton flower, Phantom black, Botanic green, light pink போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிகழ்ச்சியின் நேரலை சாம்சங் வலைதளம் மற்றும் youtube தளங்களில் ஒளிபரப்பாகிறது.