வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் விரைவில் தங்கள் சர்வதேச மொபைல் எண் மூலமாக UPI வசதியை பயன்படுத்த முடியும் என்று தேசிய பேமெண்டஸ் கார்ப்பரேஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளில் இந்த வசதி அமலாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சமீப காலமாக அதிகரித்து வருகின்றது.

அதிலும் UPI மூலமாக நடைபெறும் பணப்பரிவர்த்தனைகள் ஜெட் வேகத்தில் இந்தியாவில் அதிகரித்து வருகின்றது. பெட்டி கடைகள் முதல் ஷாப்பிங் மால்கள் வரை UPI வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி இருப்பதால் இதன் பயன்பாடு அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றது. பயன்படுத்துவதற்கு வசதியாகவும் சில வினாடிகளில் பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் பலரும் ரொக்க பரிமாற்றத்தை விட யுபிஐ மூலமாக பணம் செலுத்துவதையே விரும்புவதாக வணிக நிறுவனங்கள் கூறுகின்றது.

மேலும் இந்த சேவை வெகு சீக்கிரமாக வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்திய மக்களும் பயன்படுத்த முடியும் என்று கூறுகின்றனர். சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கன்னடா, ஹாங்காங், ஓமன், கத்தா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து ஆகிய 10 நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த வசதியை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. NRE, NRO அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் சர்வதேச மொபைல் எண்களைக் கொண்டு யுபிஐ மூலமாக பண பரிவர்த்தனை செய்ய முடியும் எனவும் கூறுகின்றனர்.