கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பகுதியில் சைலஜா (52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆதில் (27) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு மனநலம் சரியில்லாததால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஆதில் மனநிலை சரி இல்லாததால் அடிக்கடி தன் தாயாருடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை தன்மகளை சைலஜா சாப்பிடுவதற்காக அழைத்தார்.

அப்போது கோபத்தில் தன்னுடைய தாயை அவர் கத்தியால் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சைலஜா கீழே சரிதார். அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து உடனடியாக சைலஜாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் இறந்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆதிலை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.