சற்றுமுன்: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்…!!!

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். இதற்கு “நாரி சக்தி வந்தன்” என்று மத்திய அரசு பெயரிட்டுள்ளது. புதன்கிழமை மக்களவையிலும், வியாழக்கிழமை ராஜ்யசபாவிலும் விவாதம் நடைபெறும். இதற்காக 128வது அரசியலமைப்பு திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது. ஆனால், மசோதாவின் நகல் தங்களுக்கு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தன. டிஜிட்டல் வடிவில் அனுப்பப்பட்டதாக மத்திய அரசு பதிலளித்துள்ளது.

Leave a Reply