மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா: சிறப்பம்சங்கள் ஏனெனென்ன ?

மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்காக 128 வது அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையிலே தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரிலேயே அதாவது,  அடுத்த இரண்டு,  மூன்று நாட்களிலேயே ஒப்புதல் பெற்றுவிடும். ஆனால் அதன் பிறகு ஒவ்வொரு மாநில சட்டசபையும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும்.

மொத்தம் உள்ள சட்டமன்றங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் சட்டமன்றங்கள் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். 33% இட ஒதுக்கீட்டை அவர்கள் ஏற்க வேண்டும். அதன் பிறகு தான் இது அமலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இது நாடாளுமன்ற தொகுதிகளை மட்டும் 33% ஒதுக்கீடு செய்யவில்லை. மாநில சட்டசபையில் உள்ள தொகுதிகளிலும் 33% இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதேபோல யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தும்.

ஆகவே மொத்தமுள்ள சட்ட சபைகளில் 50 சதவீதம் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.  இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் ? இந்த இட ஒதுக்கீடு 15 வருடங்களுக்கு அமலில் இருக்கும். இது அமலுக்கு வருவதில் தாமதம் இருக்கிறது. அதாவது மக்களவைத் தொகுதிகளை மறு வரையறை செய்ய வேண்டும். அதன் பிறகு மக்களவையில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அந்த சமயத்தில் தான் இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வரும்.

இதற்கு முன்பாக மக்கள் தொகை கணக்கிடு நடைபெற வேண்டும். ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட்டு, இன்னும் நடைபெறாமலே உள்ளது.  மக்கள் தொகை கணக்கீடு நடைபெற்ற பிறகு,  மக்களவைத் தொகுதிகள் மறு வரையறை செய்யப்பட வேண்டும்.  அதன் பிறகு தான் மகளிர் 33% இட ஒதுக்கீடு அமலுக்கு வரும்

இதற்கு ஒரு சில வருடங்கள் பிடிக்கும்.  அடுத்த வருடத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலே இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. அதேபோல அடுத்த கட்டமாக நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டமன்றங்களிலும் இது அமலுக்கு வர வாய்ப்பு இல்லை. மகளிர் இட ஒதுக்கீடு வருவதால் எஸ்சி/ எஸ்டி ஒதுக்கீடுகள் தொகுதி ஒதுக்கீடுகள் பாதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

Leave a Reply