தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கீழ் கொள்ளுப்பட்டி பகுதியில் விவசாயியான மாரியப்பன் என்பவர் விசித்து வருகிறார். இவரது மகள் கவிப்பிரியா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கவிப்பிரியாவின் தாய்க்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் பாப்பாரப்பட்டியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனால் மாரியப்பன் தனது மகளிடம் சமையல் செய்து, மாட்டுக்கு புல் அறுத்து போடுமாறு கூறியுள்ளார்.

மேலும் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் கவிப்பிரியா எலிமருந்தை தண்ணீரில் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.