தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் குறித்து கடந்த மாதம் தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திய நிலையில் இந்த தகவல்களை யார் பரப்பியது என்று காவல்துறையினர் தீவிர ஆய்வு நடத்தினர். இது போன்ற தவறான தகவல்களால் வட மாநிலத்தவர்கள் மீது சில இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நடந்து வரும் விவாதத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,தமிழகத்தில் போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பும் நபர்கள் மீதும் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அமைதியான முறையில் பணியாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இது தொடர்பாக இதுவரை 88 வழக்குகளில் 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.