கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமாருக்கு மும்பையை சேர்ந்த 27 வயது இளம் பெண்ணுடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மாறியது. இந்நிலையில் செந்தில்குமார் அந்த பெண்ணிடம் “உன்னை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையாக இருக்கிறது. கோவைக்கு எப்போது வருவாய்?” என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் முக்கியமான நிகழ்ச்சி என்றால் சொல்லுங்கள் நான் வருகிறேன் என கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து செந்தில்குமார் தனது பிறந்தநாள் அன்று கோவைக்கு வருமாறு பெண்ணிடம் கூறியுள்ளார். எனவே பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக அந்த பெண் விமானம் மூலம் கோவைக்கு வந்துள்ளார். இருவரும் பல இடங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ச்சியாக பேசினார். இதனையடுத்து செந்தில்குமார் அந்த பெண்ணை ஆர்.எஸ்.புரத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்க வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் அந்த பெண்ணிடமிருந்து பல்வேறு கட்டங்களாக செந்தில்குமார் 70 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பின் கோவை மாநகர் மேற்கு பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செந்தில்குமரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.