கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு ஒரே மாதிரியான கட்டண நடைமுறை தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான இடங்களில் ஒன்றுதான் கொடைக்கானல். இங்கு லட்சக்கணக்கான மக்கள் வருடம் தோறும் வந்து செல்வது வழக்கம். அதனால் மக்களை கவரும் வகையில் குணா குகை, தூண்பாறை, மோயர் சதுக்கம், கொடைக்கானல் ஏரி உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன.

இங்கு ஒவ்வொரு இடங்களுக்கும் ஒவ்வொரு நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்திற்கும் ஒரே கட்டணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் பெரியவர்களுக்கு முப்பது ரூபாய் மற்றும் சிறியவர்களுக்கு 15 ரூபாய் என்ற அடிப்படையில் வனத்துறை கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.