தஞ்சை புதுப்பட்டினம் கோரிக்குளம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் முருகேசன் (42) என்பவர் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். முருகேசன் மற்றும் அவரது மனைவி சுகன்யா (29) இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயது மகள் நவ்யா ஸ்ரீ மற்றும் ஒரு மாதத்திற்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை உள்ளனர். கடந்த சில மாதங்களாக முருகேசன் வேலைக்கு செல்லவில்லை.
இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை சுகன்யா தனது குழந்தையை மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். இதற்கிடையில், வீட்டில் முருகேசன் மற்றும் நவ்யா ஸ்ரீ மட்டுமே இருந்தனர். சுகன்யா மதியம் வீடு திரும்பும் போது, முருகேசனும், நவ்யா ஸ்ரீயும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தததை கண்டு அதிர்ச்சியடைந்தார். நவ்யாவை தூக்கில் தொங்கவிட்டு பின் முருகேசனும் தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதும், அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து சுகன்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.