உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு கலாச்சாரங்கள் இருக்கிறது. ஒவ்வொரு மக்களும் தங்கள் மொழி மற்றும் பழக்கவழக்கங்களால் மாறுபடும் நிலையில் வெவ்வேறு விதமான கலாச்சாரங்களையும் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் பின்பற்றப்படும் கலாச்சாரங்கள் வினோதமாக இருக்கும். அந்த வகையில் தற்போது வியட்நாமில் வாடகைக்கு பாய் பிரண்டுகளை விடுகிறார்கள். பொதுவாக வாடகைக்கு கார், வீடு கிடைக்கும். ஆனால் தற்போது அங்கு புதிதாக பாய் பிரண்டுகளை வாடகைக்கு விடுகிறார்கள். அதாவது பெண்களிடம் பெற்றோர்கள் எப்போது திருமணம் என்று கேட்பார்கள்.

சில பெண்கள் திருமணத்தை தள்ளிப் போட விரும்புவார்கள். இதன் காரணமாக அப்படிப்பட்ட பெண்கள் பாய் பிரண்டுகளை வாடகைக்கு எடுக்கிறார்கள். இந்த தொழில் அங்கு கொடிகட்டி பறக்கும் நிலையில் அது ஆண்களின் தோற்றம் போன்றவற்றைப் பொறுத்து அவர்களின் வாடகை கட்டணம் இருக்கும். மேலும் கல்யாணப்பேச்சை எடுத்தால் அந்த வாடகை பாய் பிரண்டுகளை காண்பித்து தாங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அவர்கள் கூறி விடுகிறார்கள்.