அமர்நாத் யாத்திரை என்பது ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் மன உறுதிக்கும் சகிப்புத்தன்மைக்கும் ஒரு பெரிய சவாலாக அமைகிறது. இந்த ஆண்டு, இரண்டு கால்களும் இல்லாத ஒரு பெண், செயற்கைக் கால்களின் உதவியுடன் இந்த கடினமான பயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்துள்ளார்.
அதோடு ‘பட்’ என்று அறியப்படும் இப்பெண், பாரம்பரிய பஹல்காம் பாதையை விட மிகவும் செங்குத்தான மற்றும் ஆபத்தானதாகக் கருதப்படும் ‘பால்தால்’ பாதை வழியாகப் பயணித்து அமர்நாத் குகைக் கோயிலை அடைந்து சாதனை படைத்துள்ளார்.
Video: ‘पैर नकली लेकिन भक्ति सच्ची’ कृत्रिम पैरों से महिला ने पूरी की अमरनाथ यात्रा- वीडियो वायरल https://t.co/9n0vb1LX3x
“>
இந்த சவாலான பயணத்தின் போது தனக்குப் பின்னால் நின்று தொடர்ந்து ஆதரவளித்து உதவிய தனது தம்பிக்கு, “அமர்நாத் யாத்திரையின் போது எனக்கு உதவியதற்கு நன்றி தம்பி” என்று அவர் சமூக ஊடகத்தில் நெகிழ்ச்சியோடு நன்றியைத் தெரிவித்துள்ளார். செயற்கைக் கால்களுடன் அவர் மலை ஏறும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
மேலும் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ லட்சக்கணக்கான மக்களின் பார்வைகளைப் பெற்று, இணையவாசிகளிடையே பலதரப்பட்ட விவாதங்களை உருவாக்கியுள்ளது. பல பயனர்கள் அவரது அபாரமான தன்னம்பிக்கையையும், தூய்மையான தெய்வ பக்தியையும் மனதாரப் பாராட்டி, “உங்களிடம் இருக்கும் அசாத்தியமான மன உறுதி வியக்க வைக்கிறது, இறைவன் உங்களை எப்போதும் பாதுகாப்பாராக” என்று வாழ்த்தியுள்ளனர்.
அதே வேளையில், சிலர் “இத்தகைய பக்தியைப் படம் பிடித்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை, மக்கள் மத்தியில் பாராட்டுப் பெறுவதற்காகவே கேமராவுடன் மலை ஏறியுள்ளனர்” என்று எதிர்மறையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். எவ்வாறாயினும், ஒருவரது மனதில் ஆழமான நம்பிக்கையும் வைராக்கியமும் இருந்தால் எத்தகைய உடல் ரீதியான தடைகளையும் தகர்த்து எறியலாம் என்பதற்கு இப்பெண்ணின் பயணம் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
