பிரபல நடிகர் எஸ்வி சேகர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தன்னுடைய இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றினால் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக ‌ கூறியுள்ளார். நேற்று அவருடைய நாடக பிரியா 50-வது ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது சொந்தக் கட்சியில் இருப்பவர்களையே தைரியமாக விமர்சிக்கும் துணிச்சல் எஸ் வி சேகருக்கு இருக்கிறது எனவும், அவர் ஒருவர் இருந்தாலே போதும் 2026 தேர்தலுக்கு என்று கூறினார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்வி சேகர் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு விஜய் பற்றிய கேள்விக்கு அவர் கூறியதாவது,‌ நடிகர் விஜய் இன்னும் முழுவதுமாக அரசியலுக்கு வரவில்லை. தமிழக அரசியல் சூழலில் தற்போது இருக்கும் நிலை நீடித்தால் கண்டிப்பாக அடுத்ததும் திமுக ஆட்சியைப் பிடிக்கும். நடிகர் விஜய் மறுபடியும் சினிமா சூட்டிங் மாதிரி அங்கங்க கூட்டம் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர் 234 தொகுதிகளிலும் நிற்கப் போகிறார் என்றால் கண்டிப்பாக அவரால் புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக்கொண்டு வெல்ல முடியாது. இது விஜய்க்கு நன்றாக தெரியும். இன்னும் ஒன்றரை வருடங்கள் இருப்பதால் தற்போதே அவரைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். அரசியல் என்பது ஒரு கணக்கு. கண்டிப்பாக கூட்டணி தான் முக்கியம். கூட்டணி பலத்தால் மட்டும்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை விஜய் உணர வேண்டும். தமிழகத்தின் வெற்றி என்பது 3 அல்லது 4,00,000 ஓட்டுகளில் தான் தீர்மானிக்கப்படுகிறது. இதற்கு கூட்டணி மிகவும் முக்கியம். மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் சரியான கூட்டணி அமைத்து  போட்டியிட்டால் அவர்களுக்கு தான் கண்டிப்பாக வெற்றி கிட்டும் என்று கூறினார்.