
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்சி கோயிக்காவிளை பகுதியில் ரகு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ பகுதியில் இருக்கும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்தனர்.
இது பற்றி தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தண்ணீரில் மூழ்கி இருந்த சந்தோஷின் உடலை மீட்டனர். குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.