டெல்லியை சேர்ந்தவர்கள் ராஜேஷ் – கோமல் தம்பதி. இந்த தம்பதிக்கு கவிதா, அர்ஜுன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அர்ஜுன் தேசிய குத்துச்சண்டை வீரர் ஆவார். ஆனால் அர்ஜுனன் பெற்றோருக்கு அவர் படிப்பை விட விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது பிடிக்காமல் இருந்துள்ளது.

கவிதா படிப்பில் மிகவும் புத்திசாலியாக இருந்துள்ளார் இதனால் ராஜேஷ் – கோமல் தம்பதி கவிதாவிடம் அதிக பாசத்துடன் நடந்து கொண்டுள்ளனர். இந்நிலையி்ல் சம்பவத்தன்று அர்ஜுன் காவல்துறையினருக்கு தனது பெற்றோர் மற்றும் சகோதரி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராஜேஷ் – கோமல் தம்பதி தங்களது சொத்து முழுவதையும் கவிதாவிற்கு கொடுக்கப் போவதாக அர்ஜுன் நினைத்துள்ளார். இதனால் மிகுந்த கோபமடைந்த அர்ஜுன் தனது பெற்றோரையும் சகோதரியையும் கொலை செய்துவிட்டு தனக்கு ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளார்.

ஆனால் காவல்துறையினரிடம் அவர் முன்னுக்குப் பின் முரணாக கொடுத்த தகவல்கள் அவர் மீது சந்தேகத்தை உறுதி செய்துள்ளது. அவரிடம் நடத்திய கிடுக்கு பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அர்ஜுனை போலீசார் கைது செய்துள்ளனர்.