கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹொய்சலா(34) மாரடைப்பால் உயிரிழந்தார். பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஏஜி கேஸ் தென்மண்டல கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணியை கர்நாடகா அணி வீழ்த்தியது. இந்த போட்டிக்கு பிறகு இரவு உணவு உண்ணும் போது திடீரென்று அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் கர்நாடகா பிரீமியர் லீக்கிலும் விளையாடியுள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்