ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது இளம் வழக்கறிஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான வழக்கறிஞர்கள் கிரிக்கெட் போட்டியில் பி-டீம் சார்பில் ஜெகதம்பகூடலியை சேர்ந்த மணிகண்டநாயுடு (26) என்பவர் நேற்று  கஜுவாகா ஜிங்க் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென சரிந்து விழுந்தார். உடனே அங்கிருந்த சக வீரர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். ஆனால் ​​அவர் ஏற்கெனவே உயிரிழந்து  விட்டதாக மருத்துவர்கள்கூறினர். இதனை தொடர்ந்து மணிகண்டநாயுடுக்கு இதயநோய் இருந்ததாகவும் அதனால்தான் அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.