தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா காந்தாவனம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா தாலடி பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் அறுவடை செய்யும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காந்தவனம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு கொள்முதல் நிலையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கொள்முதல் செய்யும்பணி நடைபெறாமல் இருந்ததால் விவசாயிகள் பலரும் அறுவடை செய்த நெல்மணிகளை அரசு கொள்முதல் நிலையம் முன்பாக கொட்டி வைத்து பல நாட்களாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் விவசாயிகளின் நலன் கருதி காந்தவனம் அரசு கொள்முதல் நிலையத்தில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நுகர்பொருள் வாணிப கழக உயர் அதிகாரிகள் உடனடியாக காந்தவனம் அரசு கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யும் பணியை தொடங்கி வைத்ததால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.